19 August 2026

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல்

To Download Txt Lyrics file

 

 

Youtube Link

 

 

          அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

            கூடி வந்துள்ளோம்

            ஒருமனதோடு முழுமனதோடு

            அவர் நாமம் உயர்த்துவோம்

            இயேசுவின் வல்ல நாமம் உயர்த்திடுவோம் - 2

 

                        ராஜாக்களிலும் பிரபுக்களிலும்

                        எல்லா நாமத்திலும் மேலான நாமம்

                        ‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்

                        எல்லா நாமத்திலும் மேலான நாமம், இயேசுவே

 

1.         கிருபையால் விசுவாசத்தால்

            மீட்பை பெற்றோம்

            என் சித்தம் அல்லவே எந்தன் வாழ்விலே

            உந்தன் சித்தம் நிறைவேற்றிடும்

            குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் - ராஜாக்களிலும்

 

2.         பெலவீனராய் உம்மை நோக்கியே

            நாங்கள் வந்து நிற்கிறோம்

            எங்கள் பெலத்தினால் கூடாதைய்யா

            தேவ ஆவியாலே ஆகும்

            சர்வவல்லவரின் ஆவியாலே ஆகும் - ராஜாக்களிலும்

 

3.         கட்டுகள் உடைந்தது

            என் சாபங்கள் தொலைந்தது

            உம் தயவினால் தைரியமாய்

            தேவபிரசன்னத்தில் பிரவேசித்தோம்

            உம் தழும்பினால் குணமாகிறோம்

            அவர் சிலுவையால் நான் நீதிமான்

            அவர் சத்தியம் நம் விடுதலை

            வல்ல இயேசுவின் நாமத்தில் - ராஜாக்களிலும்

 

 

- Selvin Samuel

 

 

https://www.youtube.com/watch?v=9xGA-EBNzwA

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...