Posts

Showing posts from January, 2019

பாவம் போக்கும் ஜீவநதியைப்

ஜீவ நதியைப் பாராய் 135. (156) செஞ்சுருட்டி                                  ரூபகதாளம் பல்லவி                    பாவம் போக்கும் ஜீவநதியைப்                     பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி                         தீவினை தீர்க்கும் தேவமரியின்                         திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! - பாவம் சரணங்கள் 1.          கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்             கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!             மல்கிச் சிலுவை யடியில் விழுந்து             வழிந்தோடுது பாரீர்,-பாரில்! - பாவம் 2.          பாவச்சுமையால் நொந்து சோர்ந்து             பதறி விழுந் தலறி-நிதம்             கூவியழுத அனந்தம் பேரிதில்             குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! - பாவம் 3.          பத்தருளத்தி லிடைவிடாமல்             பாய்ந்து வளமீந்து-அதை             நித்தமும் பரிசுத்த குணத்தில்             நிலைநாட்டுது பாரீர்,-பாரில்! - பாவம் 4.          ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்             உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்             அறுதி [1] யட

எப்படியும் பாவிகளை

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு உதித்தார் 134. (158) காம்போதி                                               ஆதி தாளம் பல்லவி           எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு           இப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி             மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா             நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்.             - எப் சரணங்கள் 1.          மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து             இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;             கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்             பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். - எப் 2.          அச்சயன் [1] மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த             உச்சித கற்பனை கடந் திச்சையினாலே,             துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து             நிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும். - எப் 3.          தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்             பாக்கியங்கள் அனைத்தையும

விலைமதியா ரத்தத்தாலே

மீட்கப்பட்டீரே 133. (157) செஞ்சுருட்டி                                  ஆதி தாளம் பல்லவி                     விலைமதியா ரத்தத்தாலே                     மீட்கப்பட்டீரே. சரணங்கள் 1.          உலையும் பொன் வெள்ளி             உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ             சிலுவையி லேசுபரன்-வலத்             திருவிலாவில் வடியும். - விலை 2.          நீருமக் குரிமை             சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ             சீர்மண மகனுடைமை,-நீவிர்             சிந்திப்பது கடமை. - விலை 3.          ஆகங்கள் [1] அவர்க்கு             ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ             மோகஇச்சைக ளணுகாதிருத்தல்             முக்கியமென்றறியீர். - விலை 4.          ஆவியுந் தேவன்             அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ             தேவதுதிக ளதிலே-எழச்             செய்வீர் தினமு மிகவே. -விலை 5.          மனமது அவர்க்கு             மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ             பிளமுறு கேடறிவு-அதைப்             பின் தொடர்வது இழிவு. - விலை - வே. மாசிலாமணி [1] சரீரங்கள்

மரித்தாரே கிறிஸ்தேசு

மரித்தாரே கிறிஸ்தேசு 132. (155) கரஹரப்பிரியை                              ஆதி தாளம் பல்லவி                     மரித்தாரே கிறிஸ்தேசு                     உனக்காகப் பாவி. சரணங்கள் 1.          திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே, [1]             தீன தயாளத்வ மனுவேலே பாராய். - மரித்தாரே 2.          லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே,             லோலாயமாயச் சிலுவையிலே பாராய். - மரித்தாரே 3.          மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே,             மா பாடுபட்டுத் தரித்ததே பாராய். - மரித்தாரே 4.          மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக             மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய். - மரித்தாரே           - ஈ. பாக்கியநாதன் [1] குமாரன்

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

யேசுநாமம் ஒன்றை நம்புவீர் 131. (152) கமாஸ்                                                    ஆதி தாளம் பல்லவி                     யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,                     பூலோகத்தாரே. சரணங்கள் 1.          யேசு நாமம் ஒன்றை நம்பும்;             ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;             பேசும் வேறே நாமமெல்லாம்             பேருலகை ரட்சிக்காதே, - யேசு 2.          பார்த்திபன் தவீது குல             கோத்திரக் கன்னிமரிபால்,             நேத்திரம் போலே உதித்து             நேமியின் [1] ரட்சகனான, - யேசு 3.          பூதலத் தஞ்ஞான இருள்             போக்கவே மெஞ்ஞான பெருஞ்             ஜோதியாய் விளங்கும் நீதிச்             சூரிய னான மகத்வ - இயேசு 4.          பாவிகளீடேற மோட்ச             பாக்கியம் பெறுவதற்காய்             ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து             சேணுலகுக் [2] கேறிச் சென்ற, - யேசு 5.          விண்டலத்தவர்கள் சூழ,             வெருண்டலகை பதறி வீழ;             மண்டலத்தைத் தீர்வை செய்ய             மாமுகில் [3] மீ

வான இராச்சியம் வந்ததோ கோகோ

வான ராச்சியம் வந்தது 130. (159) பைரவி                                                    சாபு தாளம் பல்லவி                    வான இராச்சியம் வந் ததோ கோகோ!                    மாந்தரே! தவம்செய்யும்; ஓகோகோ! அனுபல்லவி                         ஆன சாட்சி, தியான சூட்சி, மெய்ஞ்                         ஞான காட்சியர், தோன்றினார். - வான சரணங்கள் 1.          மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்,             வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே;             என்னிலும் பெரியார் வலியார் அவர்             இந்நிலத்திடை மேவினார்; உயர் உன்னதக் கிருபை ஆழமே!   - வான 2.          பிந்தி வந்தவர், முந்தி இருந்தவர்;             பேசரும் பொருளார், பரம்பர [1] நேசர், நம் கருணாம்பரர், [2]             சுந்தரப் பரிபூரணர், காரணர்,             ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் [3] மேவினார் - வான 3.          அண்ணலார் பாத ரட்கையின் வாரையே             அவிழ்க்க, வாய்மையில் [4] எடுக்க, அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்;             திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்

என் காலம் உமது கரத்திலிருக்கிறது 129. தன்யாசி                                                 ஆதி தாளம் பல்லவி                     காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்                     கண்ணீர் விடுவாயே. அனுபல்லவி                         ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைச்                         சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் - காலத்தின் சரணங்கள் 1.          மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால்             வருங்கோபம் அறிந்திடாயோ?             கதியாம் ரக்ஷண்ய வாழ்வை கண்டு நீ மகிழ்ந்திட             காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? - காலத்தின் 2.          இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற             ஏசுனை அழைத்தாரல்லோ?             மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்             பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? - காலத்தின் 3.          நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு             நோக்கிப்பின் அழித்தாரன்றோ?             தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த             தவணையின் காலமிவ் வருட முடியலாமே -

விசுவாசியின் காதில் பட

யேசுவென்ற நாமம் இனிப்பாகுது 128. (207) சூரியகாந்தம்                                  ரூபக தாளம் பல்லவி           விசுவாசியின் காதில் பட, யேசுவென்ற நாமம்            விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1.          பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;             முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. - விசு 2.          துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;             பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியேபோகும். - விசு 3.          காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,             மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் - விசு 4.          எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,             எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. - விசு 5.          என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,             என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. - விசு

அருமருந்தொரு சற்குரு மருந்து

அருமருந்தொரு சற்குரு மருந்து 127. தேசியதோடி                                 ஆதி தாளம் பல்லவி                    அருமருந்தொரு சற்குரு மருந்து,                     அகிலமீடேற இதோ திவ்யமருந்து. சரணங்கள் 1.          திருவளர்தெய்வம் சமைத்த மருந்து,             தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து. 2.          செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து,             ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து. 3.          இருதய சுத்தியை ஈயுமருந்து,             இகபரசாதனம் ஆகும் மருந்து. 4.          ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து,             அவனியோர் [1] அழியா கற்பக மருந்து. 5.          சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து,             ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து. 6.          உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து,             உலவாத [2] அமிழ்தென வந்த மருந்து. 7.          தேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து,             தேவதேவன் திருவடி சேர்க்கு மருந்து. 8.          பணமில்லை இலவசமான மருந்து,             பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து. 9.         

ஒரு மருந்தரும் குருமருந்து

அரும் குருமருந்தே 126. (367) மோகனம்                                       ஆதி தாளம் பல்லவி                    ஒரு மருந்தரும் குருமருந்-(து)                     உம்பரத்தில் கண்டேனே. அனுபல்லவி             அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,             ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,             வரும் வினைகளை மாற்றும் மருந்து             வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. - ஒரு சரணங்கள் 1.          சிங்கார வனத்தில் செழித்த மருந்து,             ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,             மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து             வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து. - ஒரு 2.          மோசே முதல் முன்னோர் காணா மருந்து,             மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,             தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,             தீர்க்கத் தரிசிகள் செப்பிய மருந்து. - ஒரு 3.          தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,             செவிடு, குருடூமை தின்ற மருந்து,             மானா [1] திருத்துவ மான மருந்து,             மனுவாய் உலகினில் வந்த ம