30 January 2019

விலைமதியா ரத்தத்தாலே


மீட்கப்பட்டீரே

133. (157) செஞ்சுருட்டி                                 ஆதி தாளம்

பல்லவி
                   விலைமதியா ரத்தத்தாலே
                   மீட்கப்பட்டீரே.

சரணங்கள்

1.         உலையும் பொன் வெள்ளி
            உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ
            சிலுவையி லேசுபரன்-வலத்
            திருவிலாவில் வடியும். - விலை

2.         நீருமக் குரிமை
            சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ
            சீர்மண மகனுடைமை,-நீவிர்
            சிந்திப்பது கடமை. - விலை

3.         ஆகங்கள்[1] அவர்க்கு
            ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ
            மோகஇச்சைக ளணுகாதிருத்தல்
            முக்கியமென்றறியீர். - விலை

4.         ஆவியுந் தேவன்
            அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ
            தேவதுதிக ளதிலே-எழச்
            செய்வீர் தினமு மிகவே. -விலை

5.         மனமது அவர்க்கு
            மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ
            பிளமுறு கேடறிவு-அதைப்
            பின் தொடர்வது இழிவு. - விலை

- வே. மாசிலாமணி


[1] சரீரங்கள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...