ஆவியை மழைபோலே யூற்றும்


ஆவியை மழைபோலே யூற்றும்

116. (137) அமிர்தகல்யாணி                                      சாபு தாளம்

பல்லவி

                             ஆவியை மழைபோலே யூற்றும்,-பல
                             சாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்.

அனுபல்லவி

                        பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,
                        பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும். - ஆவியை

சரணங்கள்

1.         அன்பினால் ஜீவனை விட்டீர்,-ஆவி
            அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
            இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
            ஏராளமான ஜனங்களைச் சேரும். - ஆவியை

2.         சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும்
            தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
            பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
            பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். - ஆவியை

3.         காத்திருந்த பல பேரும்-மனங்
            கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
            தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
            சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். - ஆவியை

4.         தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும்
            சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
            பாத்திரராக அநேகரெழும்பப்
            பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். - ஆவியை

- அருளானந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு