சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்


சீர் ஏசுநாதனுக்கு ஜெயமங்களம்

83. (58) சுருட்டி                                            ஆதிதாளம்

பல்லவி

            சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
            திரி யேக நாதனுக்குச் சுபமங்களம்.

அனுபல்லவி

            பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,
            நேரேறு[1] போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு. - சீர்

சரணங்கள்

1.         ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்;
            அகிலப்[2] பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
            நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாலனுக்கு,[3]
            ஓதும் அனு கூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு. - சீர்

2.         மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம்;
            வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்
            கானான் நல் தேயனுக்குக், கன்னிமரிசேயனுக்கு
            கோனார் சகாயனுக்குக், கூறு பெத்த லேயனுக்கு. - சீர்

3.         பத்து லட்ச ணத்தனுக்குச், சுத்தனுக்கு மங்களம்;
            பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்;
            சத்திய விஸ்தாரனுக்குச், சருவாதி காரனுக்கு,
            பத்தர் உப காரனுக்குப், பரம குமாரனுக்கு. - சீர்

- வே. சாஸ்திரியார்


[1] நன்னெறி
[2] பூமி
[3] குணாலயனாகிய கடவுளுக்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு