விண்மணி பொன்மணி வித்தக மணியே


அருள் சூடாமணியே

101. சுருட்டி                                        சாபு தாளம்

1.         விண்மணி, பொன்மணி, வித்தக[1] மணியே,
            விட்புலம்[2] பூவிற்கு விழைத்திடுங் கனியே,
            சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
            சோதியாய் இங்கெழந் தருள் சூடா மணியே!

2.         பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே,
            பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே,
            கண்மணி பொன்றினோர்[3] கண்மணி ய்ருளக்
            கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே!

3.         மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே,
            மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே,
            நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே,
            நரர்சுரர் போற்றிடு நாயக மணியே!

- த. ஐயாத்துரை


[1] ஞான
[2] வானம்
[3] இழந்தோர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு