பாருங்கள் தொடர்ந்து வாருங்கள் கொல்கதா
பாருங்கள்,
தொடர்ந்து வாருங்கள்
58. முகாரி ஆதிதாளம்
பல்லவி
பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.
அனுபல்லவி
ஆருங் காணவே
ஆட்டுவாசல் கடந்து மலை
மேட்டில் நடந்தனந்தங்
கோட்டிகள்[1] படுகின்றார்
- பாருங்கள்
சரணங்கள்
1. பொன்னாய் ஒளிரு
மேனி மண்ணாய் மடியுதே,
புங்க[2] உடலெல்லாம்
புழுதிகள் படியுதே,
நன்னய மலர்க்
கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
நாவும் அஸ்தியும்
காய்ந்து சாவுமே பிடிக்குதே. - பாருங்கள்
2. பாவியைத் தேடி
வந்த பாதங்கள் பொரியுதே,
பட்சத்தினால்
விரித்த கைகளும் நெரியுதே,
நாபிக்கமலம்
பற்றிக் கோபித்துக் கரியுதே,
நடையு முடையுந்
தொய்ந்து சதைகளும் சரியுதே. - பாருங்கள்
3. திருமுக
அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
செங்குரு
திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
சருவ
வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
ஜகமும்
பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. - பாருங்கள்
4. துன்ப துரிதத்திலும்
அன்பையே பொழிகின்றார்,
துட்டர்கள் அதற்காகத்
திட்டுகள் மொழிகின்றார்,
அன்பாய்ப் பிழைக்கத்
தமதாவியைக் கெடுக்கின்றார்,
அந்தோ நசரேத்தையர்
நொந்தடி எடுக்கின்றார் - பாருங்கள்
- வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment