22 January 2019

வர வேணும் என தரசே

வரவேணும் எனதரசே
 71. (119) கரஹரப்பிரியா                                 ஆதிதாளம்
பல்லவி
                        வர வேணும், என தரசே,
                        மனுவேல், இஸரேல் சிரசே.

அனுபல்லவி 
                        அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
                        அசரீரி ஒரே சரு வேசா! - வர

சரணங்கள்
1.         வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,
            ஆதார நிராதரா[1], அன்பான சகோ தரா,
            தாதாவும் தாய் சகலமும் நீயே;
            நாதா, உன் தாபரம் நல்குவாயே. - வர

2.         படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
            முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,
            இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
            இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய், - வர

3.         வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,
            கானாவின் அதீதனே[2], கலிலேய வினோதனே,
            ஞானாகரமே, நடு நிலை யோவா,
            நண்பா, உனத நன்மையின் மகாதேவா! - வர

- வே. சாஸ்திரியார்



[1] ஆதாரமில்லாதவரே
[2] மனதிற்கெட்டாதவரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...