மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்
மாட்சிமையான
காட்சியைப் பார்க்கலாம்
62. (105)
கேதாரகௌளம் ஆதிதாளம்
பல்லவி
மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்,
வா,-ஆ!
கல்
வாரிச் சிலுவையில்
வானவன் தொங்கின்ற
மாட்சிமையானதோர்
காட்சியைப் பார்க்கலாம், வா
அனுபல்லவி
சூட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை
துய்யத்தை[1] நரர் மீறி
- மகா
துர்க்குணப்
பேயின் தந்திரத்தினால்
தூய்மை விட்டனர்,
வாய்மை கெட்டனர்;
சுத்த கிறிஸ்தரசன்,-தேவனுட
சித்தன், அமை
சிரசன், மாந்தர்களின்
துன்பத்தைப்
போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்,
தோஷஞ் செய்பாதகன்
வேஷமாய்த் தொங்கின்ற - மாட்
சரணங்கள்
1. எருசலை நகர் மருவுங்
கல்வாரி
என்னப்பட்ட ஒரு
மேடு;-அதில்
ஏசுக்கிறிஸ்
தெனும் நேசமகத்துவன்
எங்களுக்காய்ப்படும்
பாடு-மரக்
குருசில் ஏறியே
சிரசில் முண்முடி
கொண்டதும் நொந்ததும்
நீடு - அப்போ
கொற்றவன்[2] தன்முகம்
சற்றேனுங் காட்டாத
குறையதும் ஒரு
பீடு;
குருதி வடியவே,
சுருதி முடியவே,
பருதி மறையவே,
திரையுங் கிழியவே,
கொலைஞர் அவமதிக்க,-துஷ்டனாம்
அலகை[3] மனங்கொதிக்க,
கசப்புடன்
கோனே, என்னை
நீர் ஏனோ கைவிட்டீர்?
கொடுக்கிறேன்
ஜீவனை, எடுத்திடு மென்றழும் - மாட்சி
2. பூலோகத்தாரே,
இம்மேலான காட்சியின்
புண்ணியத்தை
வந்து பாரும்;-தேவ
புத்திரன் பக்கத்தில்
குத்துண்டு பாய்கின்ற
புனித ரத்தமும்
நீரும்-நமை
மேலோகஞ் சேர்க்கின்ற
சாலக்கிருபையின்
விஸ்தார ஊற்றென்று
சேரும்;-அதில்
விழுந்து ஆத்துமம்
முழுகிப் பாவந் தீ
வினை அகன்றிட
வாரும்;
சீலமற்ற மாந்தர்
கோல முற்ற வேந்தர்
ஜீவனாதிபதி சாவினாலே
நம்மைத்
தெய்வ லோகஞ்
சேர்க்க-நித்தியமாய்
உய்யும் சுத்தோராக்கத்-தேவசுதன்
செல்வக் கிறிஸ்தந்தக்
கல்வாரி மேட்டினில்
ஜீவன் துடிக்கத்தம்
ஆவி விடுகின்ற - மாட்சி
Comments
Post a Comment