23 January 2019

வருவார் விழித்திருங்கள்


வருவார் விழித்திருங்கள்

75. (126) சௌராஷ்டிரம்                                           ஆதிதாம்

பல்லவி

                        வருவார் விழித்திருங்கள்;-இயேசுநாதர்
                        வருவார் விழித்திருங்கள்.

அனுபல்லவி

                        பெரியவர், சிறியவர், பேதையர், மேதையர்[1]
                        சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட.                                - வரு

சரணங்கள்

1.         பேரிகையால் அண்டபித்திகளும்[2] குலுங்க,
            பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க,
            தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
            சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திலங்க.                                                         - வரு

2.         வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க,
            ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க,
            மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க,
            ஞான கானம் பாட நல்லோர் சபை தொடங்க.                                                    - வரு

3.         விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்,
            மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்,
            விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்,
            விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர்                                        - வரு

-தேவவரம்


[1] புலவர்
[2] சுவர்கள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...