என்னாலே ஜீவன் விடுத்தீரோ


என்னாலே ஜீவன் விடுத்தீரோ?

56. (100) ஆனந்தபைரவி                      ஆதிதாளம்

பல்லவி

             என்னாலே ஜீவன் விடுத்தீரோ, - ஸ்வாமீ?
            இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ?

அனுபல்லவி

                        பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே,
                        பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா,
                        பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
                        மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? - என்

சரணங்கள்

1.         கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், - மெய்ப்பூங்
            காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து
            வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால்
            விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்?
            எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே;
            எனால் உமக்கென்ன லாபம்? யேசு
            மனா பரப்ரம[1] திரு வுளமோ இது? - என்

2.         சிலுவை மரத்தில் கைகால் நீட்டி, தேவரீர்
            திருவிலாவைத் துளைக்க ஈட்டி, காயம்
            வலிய அன்பின் கடைக்கண் காட்டி,-இன்னம்
            வரவழைக்கிறீர் தயை பாராட்டி;
            விலைகொடுத்தெனைக் கூட்டி, மிக்க சலாக்யம் சூட்டி,
            மீண்டவாறிது மிக்க விசாலமே,
            ஆண்டவா, அது பக்கிஷ[2] நேசமே. - என்

- வே. சாஸ்திரியார்


[1] பரம்பொருள்
[2] பட்சமுள்ள

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு