எமை
ஆளும் பரிசுத் தரூபியே
111. (131) சேனாவதி ரூபக
தாளம்
பல்லவி
அரூபியே, அரூப சொரூபியே,-எமை
ஆளும் பரிசுத்தரூபியே, அரூப
சொரூபியே.
அனுபல்லவி
திருவிணா[1] டுறை
நிதான கருணையா திபதி மோன[2]
சுரநரர்[3] வணங்கும்
வான ஒருபரா பர மெய்ஞ்ஞான - அரூ
சரணங்கள்
1. ஆதி காரண அரூபியே,-அசரீரி சத்ய
நீதி ஆரண[4] சொரூபியே,
வேத வாசக சமுத்ர, ஓதும் வாய்மைகள் சுமுத்ர,[5]
தீதிலா துயர் விசித்ர, ஜாதி யாருட பவித்ர[6] - அரூ
2. சீரு லாவிய தெய்வீகமே,-திரி முதல் ஒரு பொருள்
ஏரு[7] லாவிய
சிநேகமே,
பாருளோர் பணிந்து போற்றும் ஆரியர்,[8] அடியர்
சாற்றும்
நேரமே புகழை ஏற்றும்; வீரமாய் மனதை ஆற்றும்
- அரூ
3. பக்தர் பாதகம் அடாமலே[9],-பசா
சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே,
அத்தனார்[10] தேவ
கோபம், நித்ய வேதனைகள் சாபம்,
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன்
பிரதாபம்[11] - அரூ
- வே. சாஸ்திரியார்
No comments:
Post a Comment