காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
என் காலம் உமது கரத்திலிருக்கிறது
129.
தன்யாசி ஆதி
தாளம்
பல்லவி
காலத்தின்
அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே.
அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைச்
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
- காலத்தின்
சரணங்கள்
1. மதியை
யிழந்துதீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம்
அறிந்திடாயோ?
கதியாம்
ரக்ஷண்ய வாழ்வை கண்டு நீ மகிழ்ந்திட
காலம்
இதுவே நல்ல காலம் என்றறியாயோ? - காலத்தின்
2. இகத்தினில்
ஊழியம் அகத்தினில் நிறைவேற
ஏசுனை
அழைத்தாரல்லோ?
மகத்துவ
வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால
முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? - காலத்தின்
3. நோவாவின்
காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின்
அழித்தாரன்றோ?
தாவாத
கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின்
காலமிவ் வருட முடியலாமே - காலத்தின்
4. முந்தின
எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை
நீ அறியாயோ?
எந்தக்
காலமும் சிரஞ்சீவியென்றெண்ணிடாமல்
ஏற்ற
ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? - காலத்தின்
-சா. பரமானந்தம்
Comments
Post a Comment