30 January 2019

மரித்தாரே கிறிஸ்தேசு


மரித்தாரே கிறிஸ்தேசு

132. (155) கரஹரப்பிரியை                              ஆதி தாளம்

பல்லவி

                   மரித்தாரே கிறிஸ்தேசு
                   உனக்காகப் பாவி.

சரணங்கள்

1.         திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே,[1]
            தீன தயாளத்வ மனுவேலே பாராய். - மரித்தாரே

2.         லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே,
            லோலாயமாயச் சிலுவையிலே பாராய். - மரித்தாரே

3.         மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே,
            மா பாடுபட்டுத் தரித்ததே பாராய். - மரித்தாரே

4.         மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
            மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய். - மரித்தாரே         

- ஈ. பாக்கியநாதன்


[1] குமாரன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...