23 January 2019

உனக்கு நிகரானவர் யார்


உனக்கு நிகரானவர் யார்?

88. தோடி                                                               ஏகதாளம்

பல்லவி

                        உனக்கு நிகரானவர் யார்?-இந்த
                        உலக முழுவதிலுமே.

அனுபல்லவி

            தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனார்
            மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த.              - உனக்கு

சரணங்கள்

1.         தாய் மகளுக்காகச் சாவாளோ-கூடப் பிறந்த
            தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
            நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
            நேர் விரோதிக்காய் ஈவானோ?
            நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
            காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி. - உனக்கு

2.         கந்தை உரிந்தெறிந்தனை-நீதியின் ஆடை
            கனக்க உடுத்துவித்தனை,
            மந்தையில் சேர்த்து வைத்தனை, கடும்வினைகள்
            மாற்றி எந்தனைக் காத்தனை;
            கந்த மலர்ப் பாதனே, கனக ரத்ன மேருவே,
            சிந்தை உவந்து வந்த தியாக ராசனே, சுவாமி. - உனக்கு

- ல. பொன்னுச்சுவாமி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...