வான இராச்சியம் வந்ததோ கோகோ


வான ராச்சியம் வந்தது

130. (159) பைரவி                                                   சாபு தாளம்

பல்லவி

                   வான இராச்சியம் வந் ததோ கோகோ!
                   மாந்தரே! தவம்செய்யும்; ஓகோகோ!

அனுபல்லவி

                        ஆன சாட்சி, தியான சூட்சி, மெய்ஞ்
                        ஞான காட்சியர், தோன்றினார். - வான

சரணங்கள்

1.         மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்,
            வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே;
            என்னிலும் பெரியார் வலியார் அவர்
            இந்நிலத்திடை மேவினார்; உயர் உன்னதக் கிருபை ஆழமே!  - வான

2.         பிந்தி வந்தவர், முந்தி இருந்தவர்;
            பேசரும் பொருளார், பரம்பர[1] நேசர், நம் கருணாம்பரர்,[2]
            சுந்தரப் பரிபூரணர், காரணர்,
            ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில்[3] மேவினார் - வான

3.         அண்ணலார் பாத ரட்கையின் வாரையே
            அவிழ்க்க, வாய்மையில்[4] எடுக்க, அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்;
            திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே;
            தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார். - வான

4.         மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
            வைத்திருக்குது, பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்,
            வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
            வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார் - வான

5.         தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது;
            துறையினில் தமதுரிய நற்களம் மற விளக்கி, அறுதியிலே
            தோற்றக் கோதுமை கேயத்தில்[5] சேர்த்துமே
            தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இந் நேரமே - வான

- வே. சாஸ்திரியார்


[1] பரலோக
[2] கடவுள்
[3] பூமியில்
[4] வலிமையில்
[5] வீட்டில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு