சாலேமின் ராசா சங்கையின் ராசா


சடுதி வாருமேன்

72.     (121) மோகனம்                                              ஆதிதாளம்

1.         சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், ஸ்வாமி, வாருமேன்,-இந்தத்
            தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன். - சாலேமின்

2.         சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே;-இந்தச்
            சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? - சாலேமின்

3.         எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே;-நீர்
            சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே - சாலேமின்

4.         நங்கை[1] எருசலேம்பட்டணம் உம்மை நாடித்தேடுதே;-இந்த
            நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே. - சாலேமின்

5.         சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே;-உந்தஞ்
            சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே. - சாலேமின்

- அருளானந்தம்



[1] பெருமாட்டி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு