23 January 2019

ஆத்துமமே என் முழு உள்ளமே

கி.கீ:78

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   உன் ஆண்டவரைத் தொழுதேத்து

 

78. (7) ஆனந்தபைரவி                                                      ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          ஆத்துமமே, என் முழு உள்ளமே,-உன்

            ஆண்டவரைத் தொழு தேத்து;-இந்நாள் வரை

            அன்பு வைத் தாதரித்த-உன்

            ஆண்டவரைத் தொழு தேத்து.

 

                             சரணங்கள்

 

1.         போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்

            சாற்றுதற்[1] கரிய தன்மையுள்ள - ஆத்துமமே

 

2.         தலை முறை தலை முறை தாங்கும் விநோத

            உலக முன்தோன்றி ஒழியாத - ஆத்துமமே

 

3.         தினம் தினம் உலகில் நீ செய் பலவான

            வினை பொறுத் தருளும், மேலான - ஆத்துமமே

 

4.         வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த

            ஓதரும்[2] தயை செய் துயிர் தந்த - ஆத்துமமே

 

5.         உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,

            முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே

 

6.         துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,

            இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே

 

 

- தைரியம் எழுத்தர்



[1] சொல்வதற்கரிய

[2] சொல்லுதற்கரிய

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...