தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
85.
(60) பைரவி ஆதிதாளம்
பல்லவி
தோத்திரம்
செய்வேனே-ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
அனுபல்லவி
பாத்திரமாக்க
இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை[1]
யூதக் கோத்திரனை, என்றும் - தோத்திரம்
சரணங்கள்
1. அன்னை
மரி சுதனை,-புல் மீது
அமிழ்துக்
கழுதவனை,
முன்னணை
மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை
நூற்படி, இந்நிலத் துற்றோனை. - தோத்திரம்
2. கந்தை
பொதிந்தவனை,-வானோர்களும்
வந்தடி
பணிபவனை,
மந்தையர்க்
கானந்த மாட்சியளித்தோனை
வான
பரன் என்னும் ஞான குணவானை. - தோத்திரம்
3. செம்பொன்
னுருவானைத்,-தேசிகர்கள்
தேடும்
குருவானை,
அம்பர
மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு
பெற நின்று, பைம் பொன் மலர் தூவி. - தோத்திரம்
-தஞ்சை சத்தியநாதன்
Comments
Post a Comment