22 January 2019

ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா

கி.கீ:67

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆமென் அல்லேலூயா

 

67. (114) சங்கராபரணம்                                           திஸ்ர ஏகதாளம்

 

                             பல்லவி

 

          ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா;

            ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா.

 

                             அனுபல்லவி

 

                        ஓம்[1] அனாதி தந்தார், வந்தார், இறந்

                        துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

 

                             சரணங்கள்

 

1.         வெற்றிகொண் டார்ப்பரித்து-கொடும்வே

            தாளத்தைச் சங்கரித்து,-முறித்து;

            பத்ராசனக்[2] கிறிஸ்து-மரித்து,

            பாடுபட்டுத்தரித்து, முடித்தார். - ஆமென்

 

2.         சாவின் கூர் ஒடிந்து,-மடிந்து,

            தடுப்புச் சுவர் இடிந்து,-விழுந்து,

            ஜீவனே விடிந்து,-தேவாலயத்

            திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. - ஆமென்

 

3.         வேதம் நிறைவேற்றி,-மெய் தோற்றி,

            மீட்டுக் கரையேற்றி,-பொய் மாற்றி,

            பாவிகளைத் தேற்றி,-கொண்டாற்றி,

            பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார். - ஆமென்

 

 

- வேதநாயகம் சாசுதிரியார்



[1] திருவார்த்தை

[2] தலைமை ஆசனம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...