ஏசு கிறிஸ்து நாதர்
எல்லோர்க்கும் இரட்சகர்
109. (351) கேதாரம் ஆதி
தாளம்
பல்லவி
ஏசு
கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்.
சரணங்கள்
1. மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்;
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்; - ஏசு
2. வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதகள்மேல்
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்; - ஏசு
3. பாவத்தில் கோபம் வைப்பார்!
பாவிமேல் கோபம் வையார்,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்; - ஏசு
4. தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்; - ஏசு
5. அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர். - ஏசு
-
பாக்கியநாதன் தாவீது
Comments
Post a Comment