23 January 2019

பாவிக்கு நேசராரே


பாவிக்கு நேசர்

103. ஹரிகாம்போதி                              ஏக தாளம்

பல்லவி

                        பாவிக்கு நேசராரே
                        யேசு மானுவேலரே,-ஆ! நரர்

1.         மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே,
            யேசுகிறிஸ்துநாதரே, ஆசை மானுவேலரே! - ஆ!

2.         பிரயாசத்தோரே, பாரஞ் சுமந்தோரே,
            கிருபைக் கண்ணுள்ளோரே, யேசு மானுவேலரே! - ஆ!

3.         நெரித்த நாணல் முறியார், பொரித்த திரயவியார்,
            நிர்ப்பந்தரைத் தள்ளாரே, யேசு மானுவேலரே! - ஆ!

4.         கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்,
            இட்ட ப்ரசா தத்தாரே, யேசு மானுவேலரே! - ஆ!
­
- வே. சாஸ்திரியார்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...