அனந்த ஞான சொரூபா


அனந்த ஞான சொரூபா

86. (69) செஞ்சுருட்டி                                               ஆதிதாளம்

பல்லவி

          அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!

சரணங்கள்
1.         கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே - நரர்
            காண வந்தாரே;-பரன் நரர் காண வந்தாரே.
            கரு ணாகர தேவா, அனந்த ஞான சொரூபா! - அனந்த

2.         அந்தப் பரமானந்த குணாலா,[1] ஆதத்தின் தீதற்ற மனுவேலா!-எமை
            ஆண்டு கொண்டாரே,-பரன் எமை ஆண்டு கொண்டாரே, 
            ஞானாதிக்கத்[2] துரையே அனந்த ஞான சொரூபா! - அனந்த

3.         ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண[3] காரணப் பெருமானே - நரர்க்
            கன்பு கூர்ந்தாரே;-பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
            கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா! - அனந்த

4.         பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே;-எமைப்
            பார்க்க வந்தாரே;-பரன் எமைப் பார்க்க வந்தாரே,
            பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா! - அனந்த

- வே. சாஸ்திரியார்


[1] குணாலயமானவரே
[2] ஞானத்தைச் சுதந்தரமாகவுடைய
[3] வேதத்திற்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு