22 January 2019

தேவசுதனுயிர்த்தார் மிருதினின்று


தேவசுதன் உயிர்த்தார்

65. (51 L.) சங்கராபரணம்                      ஆதிதாளம்

பல்லவி

                   தேவசுதனுயிர்த்தார்-மிருதினின்று

அனுபல்லவி

            பாவ, லோக, ரோக, மேக, மேக, மேசியாபரிதி. - தேவ

சரணங்கள்

1.         நலவடு வைந்துமிலங்க, திருச்சிலுவை பதாகை துலங்க,
            பொல்லா எமனுடமன மிலங்க. - தேவ

2.         மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க,
            துஷ்ட அலகை மனங்கலங்க - தேவ

3.         பரபலியாய், நரபலியாய், திருபலியாய், ஒரு பலியாய்ப்
            பரமும், வரமும், திறமும், மருவும்
            படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென - தேவ

4.         கிறிஸ்தவரே, தரித்திரரே, கிருபையிலே பெருகுவீரே,
            கெடிசெய் கொடியன் கடியுமிடியும்
            கெடவும் படவுமிதோ, அடியுமுடியுமில்லா - தேவ

- பா. மிகாவேல்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...