கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்


குருவேசுநாதர் பாதங் கும்பிடுகிறேன்

105. (354) சக்ரவாகம்                                     ஏகதாளம்

பல்லவி
            கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்;-எங்கள்
            குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்.

சரணங்கள்

1.         அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன்;-எனை
            ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்;
            நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்;-பவ
            நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்;
            தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;-நித்திய
            சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்;
            உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்;-தொனித்
            தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன். - கும்பிடு

2.         ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன்;-ஒன்றும்
            ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
            திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்;-தவிது
            சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;
            குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்;-யூதர்
            குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்;
            அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்;-என
            தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன். - கும்பிடு

-வே. சாஸ்திரியார்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு