என்தன் பரம குரு செய்த உபகாரத்தை


ஏத்தித் துதிப்பேனே

79. (8) ரீதிகௌளை                                       சாபுதாளம்

பல்லவி

                        என்தன் பரம குரு செய்த உபகாரத்தை
                        ஏத்தித் துதிப்பேன் நானே.

அனுபல்லவி
                        தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச்
                        சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான - என்

சரணங்கள்
1.         வானத் தமலர்[1] சேனை கிரகித்து முடியாத
            மகிமைப்ர தாபம் மிகுத் தோன்,-அதி
            ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
            யாவும் நெறியில் பகுத்தோன்,
            மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின்
            விளங்கும் அனந்த சுகத்தோன்,-அக்கி
            யானத் திருள் அகலத் தான் இப்புவியில் உற்ற
            அந்த முடி வில்லாத சுந்தர கிறிஸ்துநாத - என்

2.         மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திருந்த
            முக்கியம் அனைத்தும் விடுத்து,-ஏவை
            மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
            மனுடாவதாரம் எடுத்து,
            பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும்
            பாடு பட்டுயிர் கொடுத்து,-நரர்
            அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து,
            அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து - என்

3.         பாவத் திகில் அறுத்துச், சாபத்தையும் தொலைத்து,
            பகைஞன் வினையை நீக்கிக்-கொடும்
            ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
            அடிமைகளைக் கை தூக்கி,
            தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
            திருவுள மாய் உண்டாக்கி,-நித்தம்
            மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து,
            வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான - என்

- வே. சாஸ்திரியார்


[1] பரிசுத்தர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு