தேவதே ஓர் ஏக வஸ்து தேவ நாமனாம் கிறிஸ்து


தேவதே ஓர் ஏக வஸ்து

90. (65) புன்னாகவராளி                                  ஆதிதாளம்

பல்லவி

                        தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவ நாமனாம் கிறிஸ்து,
                        தேவன் ஆதியே நமா!

அனுபல்லவி

            ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா, நமஸ்து-ஒரு-தேவதே

சரணங்கள்

1.         மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
            பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா!-ஒரு - தேவதே

2.         ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய்,
            நீதி ஞாய நேர்மையாய், நீடூழி ஆள் சுயாதிபா!-ஒரு - தேவதே

3.         மாசில்லா நேச வாச மட்டில்லா நன்மையே,
            தேசுலா[1] வனாதி ஏசு மா சிறந்த உண்மையே!-ஒரு - தேவதே

4.         ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி, ஏகமாம், ஆனந்தமே,
            மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே!-ஒரு - தேவதே

- வே. சாஸ்திரியார்


[1] ஒளி பரந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு