ஓகோ யேசுவின் நேச மதுரமே


உணர்வாயே பாவி

104. (101 L) தன்யாசி                                              ஆதி தாளம்

பல்லவி

                        ஓகோ யேசுவின் நேச மதுரமே,
                        உணர்வாயே பாவி.

சரணங்கள்

1.         ஓகோ நேசமதுயரமே நீளமோ டாழம்
            வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே. - ஓகோ

2.         மாகொடும் பாவம தாலழும் பாவியே,
            ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான். - ஓகோ

3.         பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே
            நாதனின் அன்புபோலே யேதும் உளதோ? - ஓகோ

4.         சத்ரு பூலோகந் தயாபர நேசம்
            வைத்த பொருளிதை மறந்திடலாமோ? - ஓகோ

5.         நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
            சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு. - ஓகோ

6.         நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த
            உன்னத நேசம் ஒப்புள தாமோ? - ஓகோ

7.         தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும்
            சாவினைப் போக்கும் சற்குரு நேசம். - ஓகோ

8.         இக்கணம் யேசுவையே விசுவாசி
            அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய். - ஓகோ

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு