தேவாசனப்பதியும் சேனைத்


தேவாசனப்பதி

110. காம்போதி                                             ஆதி தாளம்

1.          தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத்
            தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
                        தேவ னுரைப்படி,
                        பாவ வினைப்படி,
                        ஏவை மனப்படி,
                        ஆவல் மிகப்படி;
            வணங்குங் ஜெகஜோதிப் பொருள் தானையா. - இவர்

2.         முன்னணி பின்னணியி லோசன்னா! ஓசன்னா வென
            ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
                        உத்தம நேசனாம்,
                        சத்திய போசனாம்,
                        பக்தரின் வாசனாம்;
                        நித்திய ஈசனாம்;
            உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா. - இவர்

3.         பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
            பாவலருடன் வாரதாரையா? இவர்
                        பசியற்றிருந்தவர்,
                        பொசிப்பற்றிருந்தவர்,
                        வசை பெற்றிருந்தவர்,
                        அசைவற்றிருந்தவர்;
            பாவ விமோசன ராசன் தானையா. - இவர்

4.         சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
            சிங்காரமாய் வாருவதாரையா? இவர்
                        சீருற்றதிபனாம்,
                        பேர் பெற்றிறைவனாம்,
                        பாருற்றதிபனாம்,
                        வேருற்றெழுந்தனாம்;
            சீவ வழி சொல்வரிவர் தானையா. - இவர்

5.         எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
            குருத்தோலை வீச வாரதாரையா? இவர்
                        அரிவை பவமற,
                        பெருமை நிதந்தர,
                        கிருபை துரந்தர,
                        அருமை நிரந்தர,
            ஏசு கிறிஸ்திறைவர் தானையா. - இவர்

6.         வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
            வஸ்திரமீதில் வாருவதாரையா? இவர்
                        வல்லவராங் குரு,
                        சொல் தவறாக் குரு,
                        நல்லவராங் குரு,
                        துல்லிய சற் குரு,
            வரமிகுந்த சற்குரு தானையா. - இவர்

- மு. தேவசகாயம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு