22 January 2019

எங்கே சுமந்து போகிறீர்


எங்கே சுமந்து போகிறீர்?

60.     (103) புன்னாகவராளி                                      ஆதிதாளம்

பல்லவி

            எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
            எங்கே சுமந்து போகிறீர்?

சரணங்கள்

1.         எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
            அங்கம் முழுதும் நோக, ஐயா, என் ஏசுநாதா - எங்கே

2.         தோளில் பாரம் அழுத்த, தூக்கப் பெலம் இல்லாமல்
            தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் - எங்கே

3.         வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக,
            பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர - எங்கே

4.         தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
            மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர - எங்கே

5.         வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்,
            எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் - எங்கே

6.         மாசணுகாத சத்திய வாசகனே, உமது
            தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து - எங்கே

- ஏசுதாசன் அண்ணாவியார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...