பரனே பரப்பொருளே நித்ய
பரனே பரப்பொருளே
53. (44) உசேனி சாபுதாளம்
கண்ணிகள்
1. பரனே, பரப்பொருளே-நித்ய-பாக்கியனே
சத்ய வாக்கியனே,
நரரான பாவிகட்காய்-இந்த-நானிலத்தில் வந்த
வானவனே!
2. காவில் அதம் ஏவை-தேவ-கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற-பொல்லா-வெஞ்சினக் கூரியின்
வஞ்சமற
3. வேறோர் மலர்க்காவில்-சென்று-வேதனைப் போற்றி,
மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம்-உந்தன்-ஆத்துமத்தில்
வரலானதுவோ?
4. ஈராறு சீடர்களில்-பண இச்சை-மிகுந்த ஒரு சீடன்,
பேர் யூதாஸ்காரி யோத்தாம்,-அவன்-பேசினதின்படி
காசு பெற்று.
5. ஓன்னாரின் கும்புகளை-அழைத்-தோடிவந்தே, உம்மை
நாடி வந்தே,
கன்னத்தில் முத்தமிட்டே,-உம்மைக்-காட்டிக்
கொடுக்கத் துணிந்தானோ?
6. காட்டிக் கொடுத்திடவும்,-அந்த-காதகராகிய பாதகர்
கை
போட்டே பிடித்திடவும்,-பின்னும்-பொற்கரங்
கட்டி இழுத்திடவும்.
7. செம்புருவையைப்
போலே-கூடச்-சென்றிடக் காய்பாமுன் நின்றிடவும்,
அம்பரனே, உந்தனுக்கு-இந்த-ஆபத்துவந்த தென்
பாவம் அல்லோ?
.
- வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment