சொல்லரும் மெய்ஞ்ஞானரே


சொல்லரும் மெய்ஞ்ஞானரே

93. (70) உசேனி                                            ஆதிதாளம்

பல்லவி

            சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
            சுரூபத் தரூபக் கோனாரே.-உரை

அனுபல்லவி

            வல்லறஞ் சிறந்து மனுவானாரே,-உயர்
            இல்லறந் துறந்து குடிலானாரே,-உரை - சொல்

சரணங்கள்

1.         மாடாயர்[1] தேடும் வஸ்துபகாரி,-மிகு
            கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,[2]
            வையகம் புரப்பதற்கு வந்தாரே,-அருள்
            பெய்து நவமும் தவமுந் தந்தாரே,-உரை - சொல்லரும்

2.         அச்சய[3] சவுந்தர அசரீரி,-அதி
            உச்சித சுதந்தர அருள்வாரி,[4]
            ஐயா வல்லாவே, மாதேவா,-ஓ!
            துய்யா,[5] நல்லாவே, ஏகோவா,-உரை - சொல்லரும்

3.         பாவ வினை யாவையுந் தீர்த்தாரே,-உயர்
            தேவ குலமாய் எமைச் சேர்த்தாரே;
            பக்கிஷத்தால்[6] முகம் பார்த்தாரே,-பெரும்
            பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே,-உரை - சொல்லரும்

- வே. சாஸ்திரியார்


[1] மாட்டிடையர்
[2] தயாளன்
[3] அழிவில்லாத
[4] அருட்கடலே
[5] பரிசுத்தனே
[6] பட்சத்தால்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு