Posts

Showing posts from February, 2017

தேவாதி தேவன் தனக்குச்

மங்களம் 378. (376) சௌராஷ்டிரம்                                     ஆதி தாளம் பல்லவி                      தேவாதி தேவன் தனக்குச்                     சீர்த்தி [1]  மேவு மங்களம் அனுபல்லவி               ஜீவாதிபதி நித்யனுக்குத்              திவ்ய லோக ரட்சகனுக்குத் - தேவாதி சரணங்கள் 1.           ஞானவேத நாயகனுக்கு,              நரரை மீட்ட மகிபனுக்குத், - தேவாதி 2.           பக்தர் மறவா பாதகனுக்குப்              பரம கருணா நீதனுக்குத், - தேவாதி 3.           ஜெக சரணிய நாதனுக்குச்              சீஷர் புகழும் போதகனுக்குத், - தேவாதி - ல்.ஈ. ஸ்தேவான் [1]  கீர்த்தி

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம்

O worship the King all glorious above Hanover 24                                     10, 10, 11, 11 1.           மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்,             வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்;             நம் கேடகம் காவல் அனாதியானோர்,             மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர். 2.          சர்வ வல்லமை தயை போற்றுவோம்,             ஒளி தரித்தோர், வானம் சூழ்ந்தோராம்;             குமுறும் மின் மேகம் கோபரதமே,             கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே 3.          மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்;             என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்;             ஆ! உருக்க தயை! முற்றும் நிற்குமே,             மீட்பர், நண்பர், காவலர், சிருஷ்டிகரே. 4.          ஆ! சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!             மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே,             போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்             மெய் வணக்கமாய் துதி பாடலோடும்.

தூய தூய தூயா சர்வவல்ல நாதா

Holy, Holy, Holy, Lord God Almighty Nicaea                                    Irregular 22 1.           தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!             தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே             தூய, தூய, தூயா! மூவரான ஏகா!             காருணியரே, தூய திரியேகரே! 2.          தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று             தெய்வ ஆசன முன்னர் தம் கிரீடம் வைப்பரே,             கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப் பெற்று,             இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே! 3.          தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,             பாவக்கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?             நீரே தூய, தூயர், மனோ வாக்குக் கெட்டா             மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர், 4.          தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!             வானம், பூமி, ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே;             தூய, தூய, தூயா! மூவரான ஏகா!             காருணியரே, தூய திரியேகரே!

சேனையின் கர்த்தா

Sp S 23 21                                     5, 6, 7, 5, 5, 8 1.           சேனையின் கர்த்தா                         சீர்நிறை யெகோவா!             உம் வாசஸ்தலங்களே                         எத்தனை இன்பம்!                         கர்த்தனே என்றும்             அவற்றை வாஞ்சித்திருப்பேன். 2.          ராஜாதி ராஜா                         சேனைகளின் கர்த்தா!             உம் பீடம் என் வாஞ்சையே                         உம் வீடடைந்தே                         உம்மைத் துதித்தே             உறைவோர் பாக்கியவான்களே. 3.          சேனையின் கர்த்தா!                         சீர் பெருகும் நாதா!             எம் கேடயமானோரே!                         விண்ணப்பம் கேளும்                         கண்ணோக்கிப் பாரும்,             எண்ணெய் வார்த்த உம் தாசனை. 4.          மன்னா நீர் சூரியன்                         என் நற்கேடயமும்;             மகிமை கிருபை ஈவீர்;                         உம் பக்தர் பேறு                         நன்மை அநந்தம்             உம்மை நம்புவோன

எவ்வண்ணமாக கர்த்தரே

Wherewith O God shall I draw near Martyrdom.     Wiltshire 19                                                                                            C.M. 1.        எவ்வண்ணமாக, கர்த்தரே                         உம்மை வணங்குவேன்?             தெய்வீக ஈவைப் பெறவே                         ஈடென்ன தருவேன்? 2.          அநேக காணிக்கைகளால்                         உம் கோபம் மாறுமோ?             நான் புண்ணிய   கிரியை செய்வதால்                         கடாட்சம் வைப்பீரோ? 3.          பலியின் ரத்தம் வெள்ளமாய்                         பாய்ந்தாலும், பாவத்தை             நிவிர்த்தி செய்து சுத்தமாய்                         ரட்சிக்கமாட்டாதே. 4.          நான் குற்றவாளி, ஆகையால்                         என் பேரில் கோபமே             நிலைத்திருந்து சாபத்தால்                         அழிதல் நியாயமே. 5.          ஆனால் என் பாவம் சுமந்து                         ரட்சகர் மரித்தார்;             சாபத்தால் தலை குனிந்து                         தம் ஆவியை விட்டார்.

எங்கும் நிறைந்த தெய்வமே

Rivaulx 18                                                                                     L.M. 1.           எங்கும் நிறைந்த தெய்வமே,             ஏழை அடியார் பணிவாய்             துங்கவன் உந்தன் பாதமே             ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய். 2.          உலக எண்ணம் நீங்கியே             உந்தனில் திட மனதாய்             நலமாய் உள்ளம் பொங்கியே             நாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.          கேட்டிடும் தெய்வ வாக்கியம்             கிருபையாய் மனதிலே             நாட்டிட நின் சிலாக்கியம்             நாங்கள் நிறையச் செய்காலே. 4.          தூதர்கள் கூடிப் பாடிடும்             தூயர் உம்மை மா பாவிகள்             பாதம் பணிந்து வேண்டினோம்             பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்.

ஆ கர்த்தாவே தாழ்மையாக

Ermuntre dich mein schwacher Geist Alleluya dulce carmen 16                                                                    8, 7, 8, 7, 4, 7 1.        ஆ கர்த்தாவே, தாழ்மையாக                         திருப் பாதத்தண்டையே             தெண்டனிட ஆவலாக                         வந்தேன், நல்ல இயேசுவே;                         உம்மைத் தேடி             தரிசிக்கவே வந்தேன். 2.          வல்ல கர்த்தாவினுடைய                         தூய ஆட்டுக்குட்டியே,             நீரே என்றும் என்னுடைய                         ஞான மணவாளனே;                         உம்மைத் தேடி             தரிசிக்கவே வந்தேன். 3.          என் பிரார்த்தனையைக் கேளும்,                         அத்தியந்த பணிவாய்;             கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்                         உம்முடைய பிள்ளையாய்;                         உம்மைத் தேடி             தரிசிக்கவே வந்தேன்.

அலங்கார வாசலாலே

2. All saints; Neander                                               8, 7, 8, 7, 7, 7 "Open now thy gates of beauty" 1.        அலங்கார வாசலாலே                         கோவிலுட் ப்ரவேசிப்பேன்;             தேவ வீட்டில் நன்மையாலே                         ஆத்துமத்தில் பூரிப்பேன்;             தேவா, உம்தம் சமூகம்             நல்கும் திவ்ய; வெளிச்சம். 2.          கர்த்தரே, உம்மண்டை வந்த                         என்னண்டைக்கு வாருமேன்;             நீர் இறங்கும் போதனந்த                         இன்பத்தால் மகிழுவேன்;             ஏழை என்தன் நெஞ்சமும்             தேவ ஸ்தலமாகிடும். 3.          பயத்தோ டும்மண்டை சேர,                         என் மன்றாட்டும் துதியும்             நல்ல பலியாக ஏற                         உமதாவியைக் கொடும்;             தேகம், ஆவி, யாவையும்             சுத்தமாக்கி யருளும். 4.          நல்ல நிலத்தில் விழுந்த                         விதை பயிராகுமே;             அவ்வாறாக நான் மிகுந்த                         கனிகளைத

அநாதியான கர்த்தரே,

Image
Church Triumphant 14                                                                                L.M. 1.        அநாதியான கர்த்தரே,             தெய்வீக ஆசனத்திலே             வானங்களுக்கு மேலாய் நீர்             மகிமையோடிருக்கிறீர். 2.          பிரதான தூதர் உம்முன்னே             தம் முகம் பாதம் மூடியே             சாஷ்டாங்கமாகப் பணிவார்             "நீர் தூய தூயர்" என்னுவார். 3.          அப்படியானால், தூசியும்             சாம்பலுமான நாங்களும்             எவ்வாறு உம்மை அண்டுவோம்?             எவ்விதமாய் ஆராதிப்போம்? 4.          நீரோ உயர்ந்த வானத்தில்,             நாங்களோ தாழ்ந்த பூமியில்,             இருப்பதால், வணங்குவோம்,             மா பயத்தோடு சேருவோம்.

ஆயிரம் ஆயிரம் பாடல்களை

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை     ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!     யாவரும் தேமொழிப் பாடல்களால்     இயேசுவைப் பாடிட வாருங்களேன்             அல்லேலூயா! அல்லேலூயா!             என்றெல்லாரும் பாடிடுவோம்             அல்லலில்லை! அல்லலில்லை!             ஆனந்தமாய்ப் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்     புனைந்தே பண்களும் சேருங்களேன்     துதிகள் நிறையும் கானங்களால்     தொழுதே இறைவனைக் காணுங்களேன்                  - அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களே     நன்றி கூறும் கீதங்களால்     மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்     மேலும் பரவசம் கூடுங்களேன்.                                   - அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்     இறைவனைப் போற்றும் நேரங்களே     சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்     சீயோனின் கீதம் பாடுங்களே.                                     - அல்லேலூயா - தி. தயானந்தன் பிரான்சிசு

தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈது 294. (5) மணிரங்கு                                திஸ்ர ஏகதாளம் பல்லவி             தருணம் ஈதுன் காட்சி சால [1]            அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1.           கருணை ஆசன ப்ரதாப              சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! - தருணம் 2.           பரர் சுரநரர் பணிந்து போற்றும்              பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! - தருணம் 3.           உன்னதத்திருந் தென்னை ஆளும்              ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! [2]  - தருணம் 4.           அரிய வல்வினை தீப்பதற்குற              வான தட்சகா, [3] -ஓர்-அனாதி ரட்சகா! - தருணம் 5.           அலகைநரகை அகற்றி, முழுதும்              அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! - தருணம் 6.           தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,              தேவ பாலனே,-இம்-மானுவேலனே. - தருணம் - வே. சாஸ்திரியார் [1]  மிக்க [2]  கடவுளே [3]  படைப்பாளி

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

Image
Rejoice in the Lord O let His mercies SS 508 356                                                           11, 8, 11, 8 with refrain. 1.           களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,             தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;             அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,             எப்பாவம் பயம் நீக்குவார்.                          கர்த்தர் நம் பட்சம்                                      கர்த்தர் நம்மோடு                         கர்த்தர் சகாயர்                                      யார் எதிர்க்க வல்லோர்?                         யார் யார் யார்?                                     யார் எதிர்க்க வல்லோர்?                         யார் வல்லோர்? 2.          திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்                         கர்த்தாவின் வல்ல கரத்தால்;             உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,                         அவரே திடன் ஆகையால். 3.          வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்                         கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;             பூமி ஒழிந