உன்னதம் ஆழம் எங்கேயும்
Praise to the Holiest in the
height
Gerontius Richmond
3 CM
உன்னதம்,
ஆழம், எங்கேயும்
தூயர்க்கு
ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த
அற்புதம்.
2. பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம்
ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ,
நேச ஞானமே!
3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த
மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ
ஞான அன்பிதாம்!
4. மானிடர் சுபாவம் மாறவே,
அருளைப்
பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே
தம்மையும்.
5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை
வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!
6. கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை
சகித்தார்;
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக்
கற்பித்தார்
7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த
அற்புதம்.
Comments
Post a Comment