03 February 2017

ஆத்மமே உன் ஆண்டவரின்

பாமாலை:1

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Praise my soul the King of Heaven

Alleluya dulce carmen

Praise my Soul                                                                    

 

1                                                                                                          8, 7, 8, 7, 8, 7

 

1.       ஆத்மமே, உன் ஆண்டவரின்

                        திருப்பாதம் பணிந்து,

            மீட்பு, சுகம், ஜீவன், அருள்

                        பெற்றதாலே துதித்து

            அல்லேலூயா, என்றென்றைக்கும்

                        நித்திய நாதரைப் போற்று.

 

2.         நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற

                        தயை நன்மைக்காய்த் துதி;

            கோபங் கொண்டும் அருள் ஈயும்

                        என்றும் மாறாதோர் துதி;

            அல்லேலூயா, அவர் உண்மை

                        மா மகிமையாம், துதி.

 

3.         தந்தைபோல் மா தயை உள்ளோர்

                        நீச மண்ணோர் நம்மையே

            அன்பின் கரம்கொண்டு தாங்கி

                        மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;

            அல்லேலூயா, இன்னும் அவர்

                        அருள் விரிவானதே.

 

4.         என்றும் நின்றவர் சமூகம்

                        போற்றும் தூதர் கூட்டமே;

            நாற்றிசையும் நின்றெழுந்து

                        பணிவீர் நீர் பக்தரே;

            அல்லேலூயா, அனைவோரும்

                        அன்பின் தெய்வம் போற்றுமே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...