தருணம் ஈதுன் காட்சி சால


தருணம் ஈது

294. (5) மணிரங்கு                                திஸ்ர ஏகதாளம்

பல்லவி

          தருணம் ஈதுன் காட்சி சால[1]
          அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே.

சரணங்கள்

1.         கருணை ஆசன ப்ரதாப
            சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! - தருணம்

2.         பரர் சுரநரர் பணிந்து போற்றும்
            பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! - தருணம்

3.         உன்னதத்திருந் தென்னை ஆளும்
            ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா![2] - தருணம்

4.         அரிய வல்வினை தீப்பதற்குற
            வான தட்சகா,[3]-ஓர்-அனாதி ரட்சகா! - தருணம்

5.         அலகைநரகை அகற்றி, முழுதும்
            அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! - தருணம்

6.         தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,
            தேவ பாலனே,-இம்-மானுவேலனே. - தருணம்

- வே. சாஸ்திரியார்



[1] மிக்க
[2] கடவுளே
[3] படைப்பாளி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு