27 May 2026

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56

Youtube Link

 

 

Text file Download

 

 

                             பல்லவி

 

          ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே - அதி

            சந்தோஷமே இது சந்தோஷமே

 

                                    அனுபல்லவி

 

                        தந்தை தாயானோரும் சொந்தமானோர்களும்

                        தந்திடாத பரமானந்தமே

 

                             சரணங்கள்

 

1.         எப்போதும் சந்தோஷம் சந்தோஷமே - இது

            ஒப்பில்லாத பரமானந்தமே

            அந்நியர்களையும் ஏகமானோரையும்

            ஒன்றாகச் சேர்க்கின்ற தானந்தமே - ஆனந்தம்

 

2.         கிறிஸ்துவின் ரத்தத்தால் மீட்டெடுத்த - மக்கள்

            ஆனந்தங் கொண்டிங்கு பாடுகிறார்

            இப் பூவிலுள்ளதை ஒப்பிடிலொவ்வாத

            ஆனந்தங் கொண்டவர் பாடுகிறார் - ஆனந்தம்

 

3.         இப்பூவி லானந்தம் இவ்விதமுண்டெனில்

            சொர்க்கத்தின் ஆனந்தம் சொல்லலாமோ?

            என் ஆத்துமாவே நீ காண்பாயே வேகத்தில்

            ஆனந்தக் கூட்டத்தை மோட்சத்திலே - ஆனந்தம்

 

4.         மண்ணான சரீரம் மாறிடும் நேரத்தில்

            விண் சரீரம் நமக்கீந்திடுவார்

            சற்று நேர மின்னும் தாமதித்திடுகில்

            பொன் நேசரை முத்தம் செய்திடலாம் - ஆனந்தம்

 

5.         இப்போது காணாமல் நேசிப்பதென்றாலும்

            சீக்கிரம் சென்று நீ கண்டிடுவாய்

            அப்போதென் நேசரின் காயங்களும் கண்டு

            ஒவ்வொன்றாய் முத்தங்கள் செய்திடலாம் - ஆனந்தம்

ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரின்

பாடல்

Youtube Link

 

Text file Download

 

 

                   ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரின் சந்நிதியில்

                        ஆனந்தமாய் கூடிடுவோம்

                        நாம் அல்லேலூயா பாடிடுவோம்

                                    நாமே இயேசு ஆலயமாம்

                                    அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் - 2

                        பாடிப் போற்றிடுவோம் தூயவனைத் துதித்திடுவோம் - ஆவியோடும்

 

1.         துன்பமென்ன துயரமென்ன

            தூய தேவன் இருக்கையிலே

            கஷ்டம் என்ன கவலை என்ன

            கர்த்தர் நம்மோடு இருக்கையிலே

            தூய மனதுடனே அவரைத் துதிக்கும் வேளையிலே

            இதய கவலையெல்லாம் நம் இயேசு அகற்றிடுவார்

            பக்தியுடன் பாடிடுவோம் பரிசுத்தரைப் போற்றிடுவோம் - ஆவியோடும்

 

2.         வாழ்வு வரும் வளமும் வரும்

            வல்ல இயேசுவைத் துதிக்கையிலே

            பாவ சாபம் தொலைந்துவிடும்

            பாடிப் போற்றி ஜெபிக்கையிலே

            கண்ணின் மணிபோல - இயேசு

            கருத்தாய் காத்திடுவார்

            விண்ணின் வாழ்வினிலே - நம்மை

            வெற்றியுடன் வாழ வைப்பார்

            வாயாற வாழ்த்திடுவோம் வாஞ்சையுடன் துதித்திடுவோம் - ஆவியோடும்

 

- Seerkazhi Yesuprakasam

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...