பல்லவி
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே - அதி
சந்தோஷமே
இது சந்தோஷமே
அனுபல்லவி
தந்தை
தாயானோரும் சொந்தமானோர்களும்
தந்திடாத
பரமானந்தமே
சரணங்கள்
1. எப்போதும்
சந்தோஷம் சந்தோஷமே - இது
ஒப்பில்லாத
பரமானந்தமே
அந்நியர்களையும்
ஏகமானோரையும்
ஒன்றாகச்
சேர்க்கின்ற தானந்தமே - ஆனந்தம்
2. கிறிஸ்துவின்
ரத்தத்தால் மீட்டெடுத்த - மக்கள்
ஆனந்தங்
கொண்டிங்கு பாடுகிறார்
இப் பூவிலுள்ளதை
ஒப்பிடிலொவ்வாத
ஆனந்தங்
கொண்டவர் பாடுகிறார் - ஆனந்தம்
3. இப்பூவி
லானந்தம் இவ்விதமுண்டெனில்
சொர்க்கத்தின்
ஆனந்தம் சொல்லலாமோ?
என் ஆத்துமாவே
நீ காண்பாயே வேகத்தில்
ஆனந்தக்
கூட்டத்தை மோட்சத்திலே - ஆனந்தம்
4. மண்ணான
சரீரம் மாறிடும் நேரத்தில்
விண் சரீரம்
நமக்கீந்திடுவார்
சற்று
நேர மின்னும் தாமதித்திடுகில்
பொன் நேசரை
முத்தம் செய்திடலாம் - ஆனந்தம்
5. இப்போது
காணாமல் நேசிப்பதென்றாலும்
சீக்கிரம்
சென்று நீ கண்டிடுவாய்
அப்போதென்
நேசரின் காயங்களும் கண்டு
ஒவ்வொன்றாய்
முத்தங்கள் செய்திடலாம் - ஆனந்தம்
No comments:
Post a Comment