19 August 2026

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல்

To Download Txt Lyrics file

 

 

Youtube Link

 

 

          அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

            கூடி வந்துள்ளோம்

            ஒருமனதோடு முழுமனதோடு

            அவர் நாமம் உயர்த்துவோம்

            இயேசுவின் வல்ல நாமம் உயர்த்திடுவோம் - 2

 

                        ராஜாக்களிலும் பிரபுக்களிலும்

                        எல்லா நாமத்திலும் மேலான நாமம்

                        ‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்

                        எல்லா நாமத்திலும் மேலான நாமம், இயேசுவே

 

1.         கிருபையால் விசுவாசத்தால்

            மீட்பை பெற்றோம்

            என் சித்தம் அல்லவே எந்தன் வாழ்விலே

            உந்தன் சித்தம் நிறைவேற்றிடும்

            குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் - ராஜாக்களிலும்

 

2.         பெலவீனராய் உம்மை நோக்கியே

            நாங்கள் வந்து நிற்கிறோம்

            எங்கள் பெலத்தினால் கூடாதைய்யா

            தேவ ஆவியாலே ஆகும்

            சர்வவல்லவரின் ஆவியாலே ஆகும் - ராஜாக்களிலும்

 

3.         கட்டுகள் உடைந்தது

            என் சாபங்கள் தொலைந்தது

            உம் தயவினால் தைரியமாய்

            தேவபிரசன்னத்தில் பிரவேசித்தோம்

            உம் தழும்பினால் குணமாகிறோம்

            அவர் சிலுவையால் நான் நீதிமான்

            அவர் சத்தியம் நம் விடுதலை

            வல்ல இயேசுவின் நாமத்தில் - ராஜாக்களிலும்

 

 

- Selvin Samuel

 

 

https://www.youtube.com/watch?v=9xGA-EBNzwA

28 July 2026

ஆற்றலாலும் அல்ல சக்தியாலும் அல்ல

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆற்றலாலும் அல்ல சக்தியாலும் அல்ல

                        ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே - 2

 

1.         மண்குடம் பொற்குடம் ஆகுமா? - ஆகுமே

            குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? - ஆகுமே - 2

            தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? - ஆகுமே

            திராட்சை ரசம் திருரத்தம் ஆகுமா? - ஆகுமே - 2 - ஆற்றலாலும்

 

2.         செங்கடல் பாதையாய் ஆகுமா? - ஆகுமே

            செத்தவர் உயிர்த்தெழல் ஆகுமா? - ஆகுமே - 2

            சிங்கம் மாடு நட்புறவு ஆகுமா? - ஆகுமே

            சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? - ஆகுமே - 2 - ஆற்றலாலும்

 

 

ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா - நம்

            ஆண்டவரின் அன்புக்கீடாகுமா

                        கோடி தந்து அதைப்பெற முடியுமா

                        அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை தெரியுமா - 2

 

1.         அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு - (2)

            நிலையான அன்பு அது நேர்மையான அன்பு - (2)

            உண்மையான அன்பு அது உறுதியான அன்பு - (2)

            கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு - (2)

 

            அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு - ஆழம்

 

2.         சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு - (2)

            தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு - (2)

            பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு - (2)

            ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு - (2)

 

            அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு - ஆழம்

 

3.         ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு - (2)

            உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு - (2)

            கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு - (2)

            இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பு - (2)

 

            அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு - ஆழம்

 

 

- Pr. Moses Rajasekar

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...