Posts

Showing posts from February, 2020

வா இயேசு அண்டை வா

                        வா இயேசு அண்டை வா தா இதயத்தை தா                         மனந்திரும்பி மன்னவன் இயேசுவையே                         இரட்சகராய் ஏற்றிடவா 1.          மரம் தான் பூக்களை சுமக்கின்றதே             மரத்தை ஒரு பூ சுமந்ததே             சிலுவை மரத்தை சாரோனின் ரோஜா             சுமந்து நமக்காய் பலியானாரே 2.          வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள             வேண்டும் என்பவனுக்கு             உன் அங்கியையும் விட்டுவிடு என்றாரே             லேகியோனுக்கு தன்             வஸ்திரத்தைக் கொடுத்தாரே             அங்கியை சீட்டு போட கொடுத்தாரே 3.          ஒரு கன்னம் அறைந்தால்             மறு கன்னம் காட்ட சொன்ன இயேசு             முன்மாதிரி ஆனாரே             ஆணியால் ஒரு கை அறைந்தவுடனே             மறு கையை ஆணிக்கு நீட்டினாரே

இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

பாடல்         இல்லாதவைகளை இருக்கிறவைப் போல             அழைக்கும் தெய்வம் நீரே                           என் தெய்வமே எனதேசுவே                         நீரே போதும்                         வேரொன்றும் வேண்டாம்   1.          வனாந்திரத்தில் வழிகளையும்             அவாந்தர வெளியில் ஆறுகளையும்             உம்மால் கூடும்             எல்லாம் கூடும்             ஒரு வார்த்தை சொன்னால் போதும்   2.          எவரையுமே மேன்மைப்படுத்த             எவரையுமே பெலப்படுத்த             உம்மால் ஆகும்             எல்லாம் ஆகும்             உம் கரத்தால் எல்லாம் ஆகும்   3.          பெலவீனனை பெலப்படுத்த             தரித்திரனை செழிப்பாக்கிட             உம்மால் கூடும்             எல்லாம் கூடும்             ஒரு வார்த்தை சொன்னால் போதும்