வா இயேசு அண்டை வா


                        வா இயேசு அண்டை வா தா இதயத்தை தா
                        மனந்திரும்பி மன்னவன் இயேசுவையே
                        இரட்சகராய் ஏற்றிடவா

1.         மரம் தான் பூக்களை சுமக்கின்றதே
            மரத்தை ஒரு பூ சுமந்ததே
            சிலுவை மரத்தை சாரோனின் ரோஜா
            சுமந்து நமக்காய் பலியானாரே

2.         வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள
            வேண்டும் என்பவனுக்கு
            உன் அங்கியையும் விட்டுவிடு என்றாரே
            லேகியோனுக்கு தன்
            வஸ்திரத்தைக் கொடுத்தாரே
            அங்கியை சீட்டு போட கொடுத்தாரே

3.         ஒரு கன்னம் அறைந்தால்
            மறு கன்னம் காட்ட சொன்ன இயேசு
            முன்மாதிரி ஆனாரே
            ஆணியால் ஒரு கை அறைந்தவுடனே
            மறு கையை ஆணிக்கு நீட்டினாரே


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே