Posts

Showing posts from February, 2019

மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை

மலையாதே நெஞ்சமே 136. (44) காம்போதி                              ஆதி தாளம் பல்லவி                    மலையாதே, நெஞ்சமே,-இப்படி நம்மை                     வகுத்தவனே தஞ்சமே. அனுபல்லவி             அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர             அருத்தப் பண் கருத்தர்க்கென்             றுரித்தல் கொண் டிருத்திக்கொள். - மலை சரணங்கள் 1.          கருத்தர் கட்டுவதல்லோ வீடு,-நரர்             கட்டும் கிரியைகள் வீண் பாடு,             வருத்தப்படுவதென்ன கேடு?-பேயின்             மயக்கமெல்லாம் விட்டுப்போடு;             தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச்             சலியாதிரு, நலியாதிரு             தந்தையார் சுதன் வந்த நாள் இது. - மலை 2.          எண்ணத்தினால் என்னகூடும்?-தெய்வம்             இட்டதல்லோ வந்து நீடும்;             மண்ணைச் சதம் என்றெண்ணி, வாடும்-மக்கள்             மனதில் துயரம் வந்து மூடும்;             கண்ணைத் திறந்து நோக்கு, விண்ணைச் சிறந்துள்ளார்க்குக்             குருத்தாய் இரு; உரித்தாய் இரு;             குருத்தரானவ

நம்பினேன் உன தடிமை நான் ஐயா

நடத்திக் காப்பதுன் கடமை 200. (232) ஆனந்தபைரவி                                   ரூபக தாளம் பல்லவி           நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-           திடப்படுத்தி என்றனை-           நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா சரணங்கள்                         உம்பரும் [1] புவி நண்பரும் மற்ற                         உயிர்களும் பல பொருள்களும் தொழும்                         தம்பிரானே, மெய் யம்பராபரா,                         தாசன் மீது நன் னேசு அருள் செய். - நம்பி சரணங்கள் 1.          தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்                         அருள்             செய்து பின்வரும் இடர்களை அறுத்து,             வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்                         செல்ல, உன்             மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;             ஆதாரம் எனக்கார், உனை அன்றி?             அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்             பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்             பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! - நம்பி 2

என் உள்ளங் கவரும் நீர் மரித்த

என் உள்ளங் கவரும் 199. உசேனி                                        ரூபக தாளம் பல்லவி                    என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த                     இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட. அனுபல்லவி             என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு             இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. - என் சரணங்கள் 1.          உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,             உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,             எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,             இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. - என் 2.          சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை             முத்திரியும் உமக்கூழியம் செய்திட,             அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்             சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட. - என் 3.          உந்தனடிதனில் உறைந்து தனித்து             ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;             என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்             இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். - என் 4.          அம்பரா, மரண ஆழி [1] தா

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் சேர்வதே 198. ஆனந்தபைரவி                                       ஏகதாளம் பல்லவி            தேவனே, நான் உமதண்டையில்-இன்னும் நெருங்கிச்             சேர்வதே என் ஆவல் பூமியில். அனுபல்லவி              மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்              கோவே, [1] தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன். -தேவனே சரணங்கள் 1.          யாக்கோபைப்போல், போகும் பாதையில்-பொழுது பட்டு             இராவில் இருள் வந்து மூடிட,             தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்             நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2.          பரத்துக்கேறும் படிகள் போலவே-என் பாதை தோன்றப்             பண்ணும் ஐயா, என்றன் தேவனே,             கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை             அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3.          நித்திரையினின்று விழித்துக்-காலை எழுந்து             கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;             இத்தரையில் உந்தன் வீடாய்

அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா

ஏசுநாதா உன் அடைக்கலமே 197. சங்கராபரணம்                                         ஆதி தாளம் பல்லவி           அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்           அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி             திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. - அடை சரணங்கள் 1.          ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,             அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;             மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே             தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! - அடை 2.          கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே             மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;             கெட்டவனே போவெனக் கிளத்தினும் [1] நியாயமே,             கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! - அடை 3.          சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்             நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;             பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை             எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! - அடை 4.          என்னிடத்தில் வருவோரை எந்தவிதம

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே

நம்பி வந்தேன் 196. (247) செஞ்சுருட்டி                          ஆதி தாளம் பல்லவி           நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே,-திவ்ய           சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே. சரணங்கள் 1.          தம்பிரான் ஒருவனே, தம்பமே [1] தருவனே;-வரு             தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே. - நான் 2.          நின்பாத தரிசனம் அன்பான தரிசனம்;-நித             நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே. - நான் 3.          நாதனே, கிருபைகூர்; வேதனே, சிறுமைதீர்;-அதி             நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே - நான் 4.          பாவியில் பாவியே, கோவியில் கோவியே, [2] -கன             பரிவுடன் அருள்புரி, அகல விடாதே; நம்பிவந்தேனே - நான் 5.          ஆதி ஓலோலமே, [3] பாதுகா காலமே-உன             தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த; நம்பிவந்தேனே - நான் - வே. சாஸ்திரியார் [1] பற்றுக்கோடு [2] கோபம் உள்ளவன் [3] ஒலி (திருவார்த்தை)

நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது

நித்திய கன்மலை எனக்காய் பிளந்தது 195. (256) முகாரி                                சாபுதாளம் பல்லவி           நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது           நேயமாய் மறைந்துய்குவேன் சரணங்கள் 1.          சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,                         தூயன் விலாவினின்று;-அதால்             சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்                         சுகமாக வாழ்வேனே. - நித்திய 2.          என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு                         ஈடு நான் செய்வதில்லை;-தினம்             சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,                         தீங்கு செய்வதில்லை - நித்திய 3.          கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்                         குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதி             கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,                         கோவே; அல்லாது துய்ந்திடேன் - நித்திய 4.          ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,                         தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளி             மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்

ஈசனே, கிறிஸ்தேசு நாயகனே 194. காம்போதி                                    ஆதி தாளம் பல்லவி                         ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! உன்றன்                         இராஜ்யம் வருவதாக!                         ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! சரணங்கள் 1.          பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக!             பாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக!             நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக!             நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக! - ஈச 2.          நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்,             வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்,             எல்லோருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்             பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம். - ஈச 3.          அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய,             அத்தன் உனைப் பார் அறிய, ஆவிக்குரிய             மெய்ஞ்ஞான அனலெரிய, விண்ணவா! நீயே பெரிய             வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா, நிறைய. - ஈச - தே.அ. ஞானபாணம்

ஆசையாகினேன் கோவே உனக்

ஆசையாகினேன் கோவே 193. (208) யமுணாகல்யாணி                        ரூபகதாளம் பல்லவி             ஆசையாகினேன், கோவே-உனக்             கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி             யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! [1] -ஆசை சரணங்கள் 1.         வேதா, ஞானப் பர்த்தா, [2] -என்-தாதா, நீயே கர்த்தா;             மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. - ஆசை 2.          கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,             நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. - ஆசை 3.          வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்             காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. - ஆசை 4.          வந்தனம், வந்தனம், யோவா!-நீ-சந்ததம் சந்ததம் கா, வா,             விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, யேசு நாதா! - ஆசை - வே. சாஸ்திரியார் [1] தாங்குவோனே [2] கணவன்

விந்தை கிறிஸ்தேசு ராசா

உன்தன் சிலுவை என் மேன்மை 192. பைரவி                                                  ரூபக தாளம் பல்லவி                     விந்தை கிறிஸ்தேசு ராசா!                     உந்தஞ் சிலுவை என் மேன்மை. அனுபல்லவி             சுந்தர மிகும் இந்த பூவில்             எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை சரணங்கள் 1.          திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி,             செல்வாக்குகள் மிக விருப்பினும்,             குருசை நோக்கி பார்க்க எனக்             குரிய பெருமை யாவும் அற்பமே. - விந்தை 2.          உம் குருசே ஆசிக்கெல்லாம்             ஊற்றாம், வற்றா ஜீவ நதியாம்             துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்             தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை 3.          சென்னி, விலா, கை, கானின்று             சிந்துதோ! துயரோடன்பு;             மன்னா, இதைப் போன்ற காட்சி             எந்நாளிலுமே எங்கும் காணேன். - விந்தை 4.          இந்த விந்தை அன்புக் கீடாய்             என்ன காணிக்கை ஈந்திடுவேன்;             எந்த அரும் பொருள் ஈடாகும்?