சீர் அடை தருணம் இதறி மனமே


சீரடை தருணம் இதறி

147. (168) கமாஸ்                                ஆதி தாளம்

பல்லவி

                   சீர் அடை தருணம் இதறி மனமே;
                   சிதைவு படும் முனமே
                   சீர் அடை; தருணம் இதறி, மனமே;

அனுபல்லவி

            பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
            ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை கணத்தில். - சீர்

சரணங்கள்

1.         நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ,-பேதாய்?
            நோய் துயர் உறும்இது மேலுல கிற்கிணை பங்கோ?
            கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற-(ரீ)
            காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. - சீர்

2.         பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய்?-ஓகோ
            போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே;
            மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி-(ரீ)
            மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து. - சீர்

- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு