வேறு ஜென்மம் வேணும் மனம்
வேறு ஜென்மம் வேணும்
143. (154) உசேனி ரூபக
தாளம்
பல்லவி
வேறு
ஜென்மம் வேணும்,-மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்
சரணங்கள்
1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; - வேறு
2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; - வேறு
3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் கிருபா தானமாய் வரும்; - வேறு
4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; - வேறு
5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; - வேறு
6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி[1] கொள்ளவும்;
- வேறு
-
த. யோசேப்பு
Comments
Post a Comment