தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன்


எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

174. (216) உசேனி                                                  ரூபகதாளம்

பல்லவி
          தந்தை சருவேஸ்பரனே, உந்தன் மகன் யேசுவுக்காய்
          எந்தன் முகம் பார்த்திரங்குவாயே-இம்மாத்ரம் நீயே,

சரணங்கள்

1.         அந்தமதிலா அகாரி[1] சந்ததமுமே விசாரி,
            விந்தை அருள் மேவும் அசரீரி, மெய்ஞ்ஞான வாரி! - தந்தை

2.         ஞானபரனே, ஒருத்வ மானமுதலே, திரித்வ
            மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! - தந்தை

3.         விற்பன விவேக நூலா, அற்புதமான சீலா,
            நற்பரம லோக அனுகூலா, நன்மை க்ருபாலா![2] - தந்தை

4.         ஆதிமுதலான நேசா, வேதமறை மீதுலாசா,
            பேதகம் இலாத சத்ய வாசா, ஞான ப்ரகாசா! - தந்தை

5.         வந்த வினை யாவும் தீரும், நிந்தை அணுகாமல் காரும்;
            சிந்தை மகிழ்ந்தே, கண்ணாலே பாரும்; சீர்பாதம் தாரும்! - தந்தை

- வே. சாஸ்திரியார்


[1] கடவுள்
[2] கிருபையளிப்பவனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு