சித்தம் கலங்காதே பிள்ளையே


சித்தம் கலங்காதே

187. (145 L.) கமாஸ்                                      ஆதி தாளம்

பல்லவி

                   சித்தம் கலங்காதே, பிள்ளையே,
                   செய்வதெ னென்று.

சரணங்கள்

1.         சுத்தனுக்குன் நிலை காட்டு,
            குவலையெல்லாம் நீ யோட்டு,
            அத்தனே உந்தனை மீட்டு
            அரவணைப்பார் நீ சாட்டு. - சித்தம்

2.         மெய்யானுக்குன் குறை சொல்லு,
            வேண்டியதடைந்து கொள்ளு,
            துய்யனிடம் நீ செல்லு,
            துர் ஆசாபாசங்கள் வெல்லு. - சித்தம்

3.         எங்கே நானேகுவே னென்று
            ஏங்கித் தவிக்காதே நின்று,
            துங்க னெல்லாத்தையும் வென்று
            சுகமளிப் பாரோ வென்று. - சித்தம்

4.         பரலோக வாழ்வை நாடு,
            பரன் தயவை நீ தேடு,
            தரை யின்பம் விட்டுப் போடு,
            தகாக் கவலை விட் டோடு. - சித்தம்

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு