பரனே திருக்கடைக்கண் பாராயோ


பரனே, திருக்கடைக்கண் பாராயோ?

177. (219) ஹரிகாம்போதி                               ஆதி தாளம்

பல்லவி

            பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன்
            பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

சரணங்கள்

1.         திறம் இலாத எனை முனியாமல்,[1]-யான்
            செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். - பரனே

2.         மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக
            வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். - பரனே

3.         அடியேனுக் கருள் செய் இப்போது,-உன
            தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? - பரனே

4.         வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன்
            மனது களிக்க வர மாட்டாயோ? - பரனே

5.         ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம்-எனக்
            கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! - பரனே

- வே. சாஸ்திரியார்


[1] கோபிக்காமல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு