27 February 2019

அந்த நாள் பாக்கிய நாள்

கி.கீ:140

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                             அந்த நாள் பாக்கிய நாள்

 

140. வசந்தபைரவி                                         திரிபுடதாளம்

 

                             பல்லவி

 

                        அந்த நாள் பாக்கிய நாள்-நான் மீட்கப்பட்ட

                        அந்த நாள் பாக்கிய நாள்.

 

                             அனுபல்லவி

 

            அந்த நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரென்னை

            அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் - அந்த

 

                             சரணங்கள்

 

1.         அன்றே எனக்குப் பேதித்தார்,-அவர் வழியில்

            அநுதினம் செல்லக் கற்பித்தார்;

            என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய

            ஏவினார் என் இரட்சகர், எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே. - அந்த

 

2.         என்றனை அன்றே இழுத்தார்-தமதன்பினால்

            இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;

            சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,

            இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன். - அந்த

 

3.         ஆறுதல்களால் நிறைந்தேன்,-அளவில்லாத

            ஆசிகளினால் மகிழ்ந்தேன்;

            தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து

            மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன். - அந்த

 

4.         அந்நாளில் வாக்குப் பண்ணினேன்,-உறுதியாக

            எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;

            சொன்ன இவ்வாக்கை நிதம், சுத்தமாய் நிறைவேற்ற

            உன்னத பலம் தாராய், என்னையாட்கொண்ட தேவா. - அந்த

 

- அருள்திரு. வே. சந்தியாகு

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...