தயை கூர் ஐயா என் ஸ்வாமீ


தயைகூர் ஐயா

156. (84) சங்கராபரணம்                                  ஆதி தாளம்

பல்லவி

            தயை கூர், ஐயா; என் ஸ்வாமீ, பாவி நான்,
            தயை கூர், ஐயா; நின்தாசன், ஏசையா;
            தயை கூர், ஐயா.

சரணங்கள்

1.         ஜெய மனுவேலன், நய அனுகூலன்,
            சீரா, தீரா, அதிகாரா, திருக்குமார,
            சேயர்கள் பணிவிடை மேவிய நேச வி
            லாச க்ருபாசன யேசு நரேந்திரா![1] - தயை

2.         வானத்திலிருந்து வந்து, ஞானத் துரு உவந்து,
            வளமை[2] கொண்டு, கிருபை விண்டு, குடில் கண்டு,
            மாடடை வீடதி னூடு புல் மேடையில்
            நீடின போதினி மோடியதாமோ? - தயை

3.         தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி,
            தராதலமேவி[3] வா, பாவி' எனக் கூவி,
            சாங்கமதாய்[4] அருள் ஓங்கி, மகா பெரு
            ஈங்கிசையாய்[5] உயிர் நீங்கினதாலே நீ. - தயை

4.         தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும்,
            சிலுவையில் மாண்டும், துயர் பூண்டும், சிறை மீண்டும்
            ஜீவனோடதிபதி பராபரனார் வல
            பாரிசமே அர சாளும் இந் நேரம் நீ - தயை

- வே. சாஸ்திரியார்


[1] அரசனே
[2] மேன்மை
[3] பூமியிடம் வந்து
[4] முழுவதும்
[5] உபத்திரவமுள்ளதாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு