விந்தை கிறிஸ்தேசு ராசா
உன்தன் சிலுவை என் மேன்மை
192.
பைரவி ரூபக
தாளம்
பல்லவி
விந்தை
கிறிஸ்தேசு ராசா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை.
அனுபல்லவி
சுந்தர
மிகும் இந்த பூவில்
எந்த
மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
சரணங்கள்
1. திரண்ட
ஆஸ்தி, உயர்ந்த கல்வி,
செல்வாக்குகள்
மிக விருப்பினும்,
குருசை
நோக்கி பார்க்க எனக்
குரிய
பெருமை யாவும் அற்பமே. - விந்தை
2. உம்
குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம்,
வற்றா ஜீவ நதியாம்
துங்க
இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே
மேன்மையாகினேன் - விந்தை
3. சென்னி,
விலா, கை, கானின்று
சிந்துதோ!
துயரோடன்பு;
மன்னா,
இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே
எங்கும் காணேன். - விந்தை
4. இந்த
விந்தை அன்புக் கீடாய்
என்ன
காணிக்கை ஈந்திடுவேன்;
எந்த
அரும் பொருள் ஈடாகும்?
என்னை
முற்றிலும் உமக்களிக்கிறேன். - விந்தை
- வே. சந்தியாகு
Comments
Post a Comment